Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd June 2019 10:33:42 Hours

கணேமுல்லை கொமாண்டோ படையணித் தலைமையகம் வரை இடம் பெற்ற ரைட் வித் பிரயிட் சைக்கிள் ஓட்டப் பயணம்

ரைட் வித் பிரயிட் எனும் தலைமையிலான சைக்கிள் ஓட்ட பயணமானது இராணுவத் தளபதியவர்களின் ஆரோக்கியமான நாட்டை உருவாக்கல் எண்ணக்கருவிற்கமைய சைக்கிள் ஓட்டப் பயணமானது இன்று காலை(23) மூன்றாம் முறையாக இடம் பெற்றது.

இச் சைக்கிள் ஓட்டப் பயணமானது இலங்கை மின்சாரவியல் மற்றும் பொறியியலாளர் படையணித் தலைமையக வளாகத்தின் அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டதோடு கொம்பஞ்சன் பொலிஸ் பிரிவு வரை 22.9கிமீ வரை தொலைவில் உள்ள மரதானை பஞ்சிகாவத்தை பேலியகொடை களணி மற்றும் கிரிபத்கொடை வரை சென்றடைந்ததுடன் இறுதியாக கணேமுல்லை கொமாண்டோ படைத் தலைமையகத்தை வந்தடைந்து நிறைவடைந்தது.

மேலும் இராணுவத் தளபதியவர்களின் எண்ணக்கருவிற்கமைய இடம் பெற்ற ரைட் வித் பிரயிட் சைக்கிள் ஓட்டப் பயணத்தில் இது சைக்கிள் ஓட்டப் போட்டியல்ல இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் போன்றோர் வயதெல்லையின்றி கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வானது இராணுவ சைக்கிள் ஓட்ட சங்கத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துமிந்த சிறினக அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன் இதன் போது பல படைத் தலைமையகங்களை முன்னிலைப்படுத்தி இராணுவப் படையினர் கலந்து கொண்டதோடு விமான கடற்படையினர் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இச் சைக்கில் ஓட்ட பயண நிகழ்வில் இராணுவத் தளபதியவர்கள் இராணுவ சைக்கிள் ஓட்ட சங்க தளபதியவர்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டதுடன் கொம்பஞ்சை வீதியில் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஓட்ட பயணத்திற்காக கொடியை இராணுவத் தளபதியவர்கள் உயர்த்தி இப் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.

இச் சைக்கிள் ஓட்ட பயண ஆரம்ப நிகழ்வில் இராணுவ விளையாட்டு பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க இராணுவ சைக்கிள் ஓட்ட சங்கத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துமிந்த சிறினக போன்றோர் கலந்து கொண்டனர்.best Running shoes | Air Jordan Release Dates Calendar