Header

Sri Lanka Army

Defender of the Nation

20th June 2019 23:50:36 Hours

பொன்டேரா நிறுவனத்தினால் வில்பத்து மரநடுகைத் திட்டத்திற்கு உதவிகள்

‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப் பொருளின் கீழ் வில்பத்து மரநடுகை திட்டத்திற்கு ஊக்குவிக்கும் முகமாக பொன்டேரா பிரேன்ட்ஸ் ஶ்ரீ லங்கா தனியார் நிறுவனத்தினால் இராணுவத்திற்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களிற்கு 1500 மரக்கன்றுகளுக்கான ஆவனப்படிவங்களுடனும், 2 இலட்சம் பெறுமதிமிக்க மின்னசக்தியில் இயங்கும் தண்ணீர் இயந்திரங்களும் இந்த நிறுவன அதிகாரிகளினால் இம் மாதம் (19) ஆம் திகதி கையளிக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் பொன்டேரா பிரேன்ட்ஸ் ஶ்ரீ லங்கா தனியார் நிறுவனத்தின் மனித வள பணிப்பாளர் செல்வி தினுஷா ஜயமான்ன, நடவடிக்கை பணிப்பாளர் திரு கமல் கீகன்னகே, ஒழுங்குமுறை விவகார பிரதி பணிப்பாளர் செல்வி தாமரி சேனாநாயக, வாடிக்கையாளர் விவகார ஒருங்கிணைப்பாளர் செல்வி சவித்யா பெரேரா , கூட்டுறவு விவகார முகாமையாளர் திரு நிமல் கமகே, ஒழுங்குமுறை விவகார பிரதி பணிப்பாளர் திரு அமில சிறிமான்ன போன்ற அதிகாரிகள் இணைந்திருந்தனர்.url clone | Nike Air Max