Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2019 15:20:04 Hours

படையணியின் ஆணைச்சீட்டு உத்தியோகர்களுக்கு இராணுவ தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் படையணியைச் சேர்ந்த 21 ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களை இம் மாதம் 18 - 19 ஆம் திகதிகளில் இராணுவ தலைமையகத்திலுள்ள இராணுவ தளபதியின் பணிமனையில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது இராணுவ தளபதி அவர்கள் இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களுக்கு அவர்கள் இராணுவத்தில் ஆற்றிய சேவையை கௌரவித்து பாராட்டுக்களை தெரிவித்து இவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ ஆளனி நிருவாக பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர மற்றும் இராணுவ தலைமையகத்தின் பிரதான ஆணைச்சீட்டு உத்தியோகத்தரும் இணைந்திருந்தனர்.Nike Sneakers | NIKE