Header

Sri Lanka Army

Defender of the Nation

19th June 2019 15:34:04 Hours

தமிழ் பெண்ணின் பெறுமதிமிக்க பொருட்கள் அவரிடம் மீண்டும் கையளிப்பு

18 ஆவது தேசிய பாதுகாப்பு பாதுகாப்பு படையணியின் பதவிநிலை சாஜனான டப்ள்யூ ஏ பிரியந்த குமார அவர்களினால் கொலகன்னாவாடிய சோதனை சாவடியில் வைத்து கண்டெடுக்கப்பட்ட 21,000 ரூபாய் பெறுமதிமிக்க 2 தங்க மோதரம், 3 வங்கி புத்தகங்கள் உள்ளடங்கிய பொருட்கள் அந்த உரிமையாளரான மட்டக்களப்பைச் சேர்ந்த இலக்கம் 286, திருவள்ளுவர், பெரிய நிலாவனில் வசிக்கும் செல்வி ஆறுமுகம் கிருஸ்ணாதேவி அவர்களுக்கு கையளிக்கப்பட்டன.

கல்முனையிலிருந்து மன்னார் நோக்கி செல்லும் NB 9742 பிரயாணி பஸ்வண்டியில் இம் மாதம் (5) ஆம் திகதி பயணித்த பிரயாணியின் இந்த பொருட்களே இந்த படையினரால் கண்டெடுக்கப்பட்டன.

18 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்துடன் ஒன்றிணைந்து இந்த உரிமையாளரை கண்டுபிடித்து இந்த பொருட்கள் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டன. Authentic Nike Sneakers | Nike for Men