Header

Sri Lanka Army

Defender of the Nation

17th June 2019 11:47:30 Hours

இலங்கை சமிக்ஞைப் படையணி பொசொன் நிகழ்வில் இராணுவத் தளபதி பங்கேற்பு

இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவா வணிதா பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொசொன் நிகழ்வில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இராணுவ சேவா வணிதா பிரிவின் தலைவியான திருமதி சேனாநாயக்க அவர்களும் கலந்து கொண்டார். அந்த வகையில் பொசொன் புத்தாபி வந்தனா எனும் தலைப்பில் பௌத்த மத வழிபாடுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (16) இடம் பெற்றது.

இலங்கை சமிக்ஞைப் படையணியின் தளபதியான மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியாராச்சி அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியவர்களையும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் வரவேற்றார். ஆதனைத் தொடர்ந்து இலங்கை சமிக்கைஞப் படையணியின் படையினர் அரஹத் மிஹிந்து தேரர் அவர்களின் சிறப்புடைய பத்திப்பாடல்களைப் பாடினர்.

இந் நிகழ்வின் இறுதியில் சேவா வணிதாப் பிரிவின் தலைவியான திருமதி சந்திரிக்கா சேனாநாயக்க அவர்கள் இப் பக்திப் பாடல்களை பாடியவர்களுக்கான பரிசில்களை வழங்கினார். மேலும் இவர்களுடனான குழுப் புகைப்படத்தில் இராணுவத் தளபதி மற்றும் திருமதி சேனாநாயக்க அவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே , நிறைவேற்று பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர இராணுவ உபகரண பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சி எம் டீ பி சந்திரசேகர , இலங்கை சமிக்ஞைப் படையணி சேவா வணிதா பிரிவின் தலைவியான திருமதி அஜந்தா ஹெட்டியாராச்சி , உயர் அதிகாரிகள் மற்றும் படையினர் , அதிகாரிகளது பாரியார்கள் போன்றோர்கள் கலந்து கொண்டனர். Nike Sneakers Store | Ανδρικά Nike