Header

Sri Lanka Army

Defender of the Nation

05th June 2019 12:47:45 Hours

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையிலான வீதியோரங்களில் மரக்கன்று நடுகை நிகழ்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52, 522 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இம் மாதம் (5) ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையிலான மிருசுவிலிலிருந்து எழுதுமட்டுவால் வரையான ஏ – 9 வீதியில் 250 மரக்கன்றுகள் ‘துருலிய வெனுவென் அபி’ எனும் தொனிப்பொருளின் கீழ் இராணுவத்தினரால் இந்த மரநடுகை நிகழ்வு மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக யாழ் மாவட்ட செயலாளர் திரு என் வேதநாயகம் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்கள் வருகை தந்து மரநடுகைகளை மேற்கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சம்பத் கொடுவேஹெதர, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அரச உயரதிகாரிகள், படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்திருந்தனர். Sportswear free shipping | Nike React Element 87