Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2019 22:31:55 Hours

கனடாவின் உயர் ஸ்தானிகர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் உயர் ஸ்தானிகர் மதிப்புக்குரிய டேவிட் மெக்கினன் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை உத்தியோகபூர்வமாக இம் மாதம் (4) ஆம் திகதி பலாலியிலுள்ள தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு படை தளபதி வடக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்தின் தலைமையிலான தேசிய நிர்மாண மற்றும் மீள்குடியேற்ற திட்டங்கள் தொடர்பாகவும், யாழ்ப்பாண குடா நாட்டில் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பான விடயங்களை விளக்கி கூறினார்.

இச்சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளும் இணைந்திருந்தனர்.Sports brands | Nike Off-White