Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2019 18:51:15 Hours

‘ரைட் வித் ப்ரயிட்’ சைக்கிள் சவாரி

ஆரோக்கியமான நாடு எனும் தொனிப்பொருளின் கீழ் இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய ‘ரைட் வித் ப்ரயிட்’ சைக்கிள் சவாரி 3 ஆவது தடவையாக ஜூன் மாதம் 23 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு இலங்கை மின்சார பொறியியல் படையணி தலைமையகத்தின் அருகாமையிலுள்ள கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆரம்பமாகின்றது.

இந்த சைக்கிள் சவாரியானது 30 கி.மீ தூரத்தை கொண்டுள்ளது. மருதானை, பஞ்சிகாவத்தை, ஆமர் வீதி சந்தியூனூடாக பேலியகொடையிலிருந்து சீதுவை விஷேட படையணியை தலைமையகத்தை போய்ச் சேரும்.

இராணுவ சைக்கிளோட்ட சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஏ.ஏ.டீ சிறிநாஹ அவர்களது பூரண ஏற்பாட்டுடன் இந்த சைக்கிள் சவாரி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் வருகை தந்து இந்த நிகழ்வுகளை ஆரம்பித்து வைப்பார். Best Nike Sneakers | NIKE HOMME