Header

Sri Lanka Army

Defender of the Nation

30th May 2019 18:17:45 Hours

அமெரிக்க பசிபிக் கட்டளை அதிகாரிகள் சிவில் விவகார அங்கத்தவர்களுக்கு இராணுவ தகவல் தொடர்பான பயிற்சி பட்டறை

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் உத்தரவின் பேரில் சிவில் விவகார அங்கத்தவர்களுக்கு சிவில் விவகாரம் மற்றும் இராணுவ தகவல் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி பட்டறையானது யாழ் தல்செவன இராணுவ விடுமுறை விடுதியில் கடந்த 29 - 30 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த பட்டறையானது இலங்கையின் ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் மேற்பார்வையின் கீழ் பசிபிக் கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் அமெரிக்க இராணுவக் குழுவினரால் நடத்தப்பட்டது.

இந்த இரண்டு நாள் விரிவுரையில் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தின் 16 அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் பசிபிக் கட்டளைத் துறையின் அதிகாரிகளான கெப்டன் ஜுப்ரியல் மேனேசீஸ் மற்றும் அவரது உதவி அதிகாரிகளால் நடத்தப்பட்டது. Adidas shoes | Klær Nike