Header

Sri Lanka Army

Defender of the Nation

30th May 2019 13:55:35 Hours

மேஜர் ஜெனரல் உதலுபொல அவர்கள் படைத் தலைமையகத்தில் வரவேற்பு

அன்மையில் பதவி உயர்த்தப்பட்ட சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஏ.கே.பீ உதலுபொல அவர்கள் இம் மாதம் (25) ஆம் திகதி சிங்கப் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுத்து இராணுவத்தினரால் வரவேற்கப்பட்டார்.

மேஜர் ஜெனரல் டப்ள்யூ.ஏ.கே.பீ உதலுபொல அவர்கள் பின்னர் தலைமையகத்திலுள்ள இராணுவ ஞாபகார்த்த நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் நீத்த படை வீரர்களை நினைவு கூர்ந்து கௌரவ அஞ்சலியை செலுத்தினார். அதன் பின்னர் தலைமையக வளாகத்தினுள் மரநடுகையும் இவரால் மேற்கொள்ளப்பட்டு ,அனைவரது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந்த உயரதிகாரி தற்பொழுது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக கடமை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ காலாட்படை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான, சிங்கப் படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் அஜித் பல்லேவல போன்ற அதிகாரிகள் இணைந்திருந்தனர். trace affiliate link | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092