Header

Sri Lanka Army

Defender of the Nation

30th May 2019 18:15:11 Hours

மகளிர் வீராங்கனைகளுக்கு முன்பள்ளி ஆசிரியர் பயிற்சிகள்

இராணுவ தளபதியின் வழிக்காட்டலின் கீழ் இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த இராணுவ வீராங்கனைகள் 20 பேருக்கு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மாத பட்டதாரி பயிற்சிகள் வழங்கப்பட்டு பின்னர் பயிற்சி நிறைவு விழா இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந்த பயிற்சிகள் ஜயசேகர முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இராணுவ பயிற்சி பணியகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம் முதனாயக அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த வீராங்கனைகள் இராணுவ சேவா வனிதா பிரிவின் முன்பள்ளிகளில் ஆசிரியாக கடமையாற்றுவதற்காக இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதலாவது இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனை ஜி டப்ள்யூ சி மதுஷானி, 7ஆவது மகளிர் படையணியைச் சேர்ந்த போர் வீராங்கனைகளான ஜே.எல்.எச்.எம் ஜயவர்தன, ஜே.எம்.ஈ.என் ஜயசுந்தர போன்ற வீராங்கனைகள் இந்த பயிற்சிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

இந்த பட்டமளிப்பு நிகழ்வில் இராணுவ பயிற்சி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா, கேர்ணல் பயிற்சி பணிப்பாளர், இராணுவ சிரேஷ்ட உயரதிகாரிகள், சேவாவனிதா பிரிவின் அங்கத்தவர்கள் இணைந்திருந்தனர். Sports brands | Nike Shoes