Header

Sri Lanka Army

Defender of the Nation

30th May 2019 18:25:44 Hours

இராணுவத்தின் ஏற்பாட்டில் உலர்உணவு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 233 ஆவது படைத் தலைமையகத்தின் பூரண ஏற்பாட்டுடன் கொட்டாவ ’காந்தி மன்றத்தின்’ அனுசரனையில் குங்கல்கல்குளம் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இம் மாதம் (25) ஆம் திகதி உலர்உணவு பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் பிரதேசத்தைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 172 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, கருவாடு, சீனி, பால் பக்கட், சவக்காரம் போன்ற உலருணவு பொருட்களும், பாடசாலை மாணவர்கள் 34 பேருக்கு பாடசாலை உபகரணங்களும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

233 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி கேர்ணல் ரஞ்ஜித் எவிடிகல அவர்களினால் குங்கல்கல்குளம் கலாச்சார மண்டபத்தில் வைத்து இந்த பொருட்கள் நன்கொடையாக இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. Running sneakers | Nike Shoes