Header

Sri Lanka Army

Defender of the Nation

30th May 2019 18:39:54 Hours

வன்னி பொது மக்களுக்கு இராணுவத்தினரால் மூக்குகண்ணாடிகள் வழங்கி வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சுபசாதனை திட்டத்தின் கீழ் மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது வழிக்காட்டலின் கீழ் ‘விஷன் கெயார்’ நிறுவனத்தின் அனுசரனையில் வன்னி பிரதேசத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் 300 பேருக்கு மூக்கு கண்ணாடிகள் இம் மாதம் (29) ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த சமூக சேவை நலன்புரித் திட்டம் வன்னி சிவில் தொடர்பாடல் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரதானி கேர்ணல் இந்து சமரகோன் அவர்கள் வருகை தந்தார்.

நன்கொடையாளர்கள் மற்றும் பயனாளிகள் வரவேற்கப்பட்ட ஒரு சிறிய நிகழ்வின் பின்பு இந்த மூக்குகண்ணாடிகளை பரிசோதனை செய்ததன் பின்பு பயணாளிகளுக்கு மூக்குகண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன. Sportswear free shipping | Nike, adidas, Converse & More