27th May 2019 12:43:12 Hours
அண்மையில் எமது நாட்டில் இடம்பெற்ற தாக்குதலின் போது 11 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 111, 112 படைத் தலைமையகங்களுக்கு உரிய படையினரால் ஆற்றிய பாரிய சேவைகளை கௌரவித்து இந்த படையினர் மத்தியில் 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் திஸ்ஸ நாணாயக்கார அவர்கள் உரை நிகழ்த்தினார்.
இந்த உரையானது 2 ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி தலைமையகத்தில் இம் மாதம் (25) ஆம் திகதி இடம்பெற்றது. இதன் போது படைத் தளபதி கடமைகளின் போது படையினர்கள் அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கு ஆற்றிய சேவையை கௌரவித்து படையினர் மத்தியில் பாராட்டையும் தெரிவித்தார்.
இதன் போது 2 (தொ) , 15 (தொ) சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினரும் கலந்து கொண்டனர்.best shoes | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf