24th May 2019 18:30:27 Hours
இம் மாதம் (23) ஆம் திகதி சுவிஸ் தூதரகத்தின் முதலாவது அரசியல் செயலாளர் திரு தமயானியா சிகையிட்டமட்டி அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இம் மாதம் (23) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
அங்கு சென்ற சுவிஸ் தூதரகத்தின் முதலாவது செயலாளர் யாழ் குடா நாட்டில் உள்ள நல்லிணக்கச் செயற்பாடு, காணி விடுவிப்பு விடயங்கள் தொடர்பாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திலுள்ள இராணுவ உயரதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பானது யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி பிரிகேடியர் பிரியந்த கமகே அவர்களது தலைமையில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது. bridge media | Nike