Header

Sri Lanka Army

Defender of the Nation

18th May 2019 23:08:22 Hours

241 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

இலங்கை இராணுவத்தின் 241 ஆவது படைத் தலைமையகத்தின் 5 ஆவது புதிய படைத் தளபதியாக கேர்ணல் டப்ள்யூ பீ ஜே கே விமலரத்ன அவர்கள் இம் மாதம் (16) ஆம் திகதி அக்கரைப்பற்றில் அமைந்துள்ள தலைமையகத்தில் தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய படைத் தளபதியை 3 (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணியின் படை வீரர்கள் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுத்து வரவேற்றனர்.

பின்னர் படைத் தலைமையக வளாகத்தினுள் புதிய படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்று சமய அனுஷ்டான ஆசிர்வாதத்துடன் புதிய படைத் தளபதி தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பொறுப்பேற்றார்.

இச்சந்தர்ப்பத்தில் 3 (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணி, 11 இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி, 16 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் 241 ஆவது படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Nike Sneakers | Nike