Header

Sri Lanka Army

Defender of the Nation

20th May 2019 13:47:42 Hours

பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதால் அச்சமின்றி மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவத் தளபதி தெரிவிப்பு

கடந்த 21ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2019ஆம் ஆண் பயங்கரவாதிகளால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் காரணமாக சமூகத்தினரின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. அத்தோடு நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றிற்கு ஒத்துழைப்பை வழங்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றவற்றில் சேவையாற்றும் சேவகர்களின் வரவானது குறைந்துள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரமும் பின்னடைந்துள்ளது. அதன் காரணமாக நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தி மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவதை நோக்காக் கொண்டு முப்படைகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்றோர் மிக அர்பணிப்புடன் அனைத்து பிரதேசங்களிற்கும் பாதுகாப்பை வழங்கியுள்ளனர்.

முப்படைகளின் தளபதியான மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களால் இராணுவம் உள்ளடங்களாக முப்படைகளிற்கும் சமாதனத்தை பாதுகாக்கும் நோக்கில் மற்றும் பயங்கரவாதிகளை இல்லாதொலிப்பதற்கான அனைத்து அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் சோதனைகளை மேற்கொண்டு இப் பயங்கரவாத செயற்பாட்டிற்கு காரணமானவர்களை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கை செயற்பாடுகளையும் இராணுவமானது மேற்கொண்டு வருகின்றது. பயங்கரவாதிகளை கண்டறியும் நோக்கில் பாதுகாப்பு படையினரால் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் மற்றும்; மக்களது பாதுகாப்பை நோக்காக் கொண்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் சேவையாற்றுபர்களின் வரவு அதிகரித்துள்ளதுடன் மக்கள் தமது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.  

இம்முறை இரண்டாம் தவணக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பாடசாலைகளில் பாதுகாப்பு தொடர்பான விசேட திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் அதிகளவிலான பெற்றோர் சில வாய்ப்பேச்சுக்கள் மற்றும் உண்மையற்ற விடயங்களை கருத்திற்கொண்டு தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு செல்வதை தடுத்தனர். இச் சந்தர்பத்தில் நான் தெரிவித்துக்கொள்வதாவது பாடசாலைகளுக்கான பாதுகாப்பை வழங்குவது முப்படை மற்றும் பொலிசாரின் முதல் கடமையாகும். எனவே எவ்வாறான பயமும் இன்றி தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பல பிரதேசங்களில் சமாதானத்திற்கு எதிரான சில செயற்பாடுகள் இடம் பெற்றிருப்பினும் அதற்கு எதிராக அனைத்து படையினர் மற்றும் பொலிசாரால் அதற்குறிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன் இச் செயற்பாடுகளை மேற்கொண்ட நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகள் ஏற்படாத வண்ணம் முப்படை மற்றும் பொலிசாரால் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த இரு தினங்களாக நாடளாவிய ரீதியில் காணப்பட்ட வெசாக் தின நிகழ்வுகளுக்கான பாதுகாப்படை வழங்கியிருந்ததுடன் இதன் காரணமாக பௌத்த மத வழிபாடுகள் எவ்வித தடையும் இன்றி இடம் பெற்றது.

அந்த வகையில் ரட ரகின ஜாதிய எனும் இலங்கை இராணுவத்தினராகிய நாம் நாட்டின் அனைத்து மக்களினம் உடைமகளிற்கும் பாதுகாப்பை வழங்குவதற்கு செயலாற்றுவதுடன் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரான சிறுவர்களை பாதுகாப்பதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் பெற்றோரிடம் நான் மீண்டும் விடுக்கும் வேண்டுகோளானது சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்புமாறும் எமது சேவைக்கு இலங்கையர்களாகிய நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என நம்புகின்றேன். . Sports brands | Nike