18th May 2019 14:36:20 Hours
எல்டிடிஈ அமைப்பினருக்கு எதிராக இடம்பெற்ற மனிதாபிமானமான நடவடிக்கைகள் முடிவுற்றதன் பின்னரான ஒரு தசாப்த கால நினைவு தினத்தை கொண்டாடும் வெற்றி தின நிகழ்வானது எதிர்வரும் 18 ஆம் திகதி வில்பத்து மரிச்சகட்டியில் இலங்கை இராணுவம் மற்றும் ‘மனுசத் தெரண’ டிவி தொலைக்காட்சி இணை ஏற்பாட்டுடன் இராணுவ ‘துருலிய வெனுவென் அபி’ எனும் திட்டத்தின் கிழ்; ஒரு பெரிய வனமயமாக்கல் செயற்திட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களின் தலைமையில் காலை 9 மணியலவில் மரிச்சகட்டி 46ஆம் கட்டைக்கு அருகாமையில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்நிகழ்ச்சியில் பெருமளவிலான இராணுவ சிப்பாய்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மற்றும் மனுசத் தெரண குழுக்கள் உள்ளிட்ட பலர் இணைந்துகொள்வர்.
இம் மரநடுகை நிகழ்வானது பலசோதிகண்டல் , கரடிக்குழி மற்றும் சிறிநாத் நகர் பிரதேசங்களில் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள பொதுமக்கள் வில்பத்துவில் இடம்பெறும் இம் மரநடுகை நிகழ்ச்சியில் இணைந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றார்கள். மேலதிக தகவல்களுக்காக தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இல. 0766907221 0766907673 0766909675 best Running shoes brand | NIKE HOMME