Header

Sri Lanka Army

Defender of the Nation

17th May 2019 22:26:23 Hours

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிர் நீத்த மக்களுக்கான பிரார்தனையில் கலந்து கொண்ட இராணுவத்தினர்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் போது உயிர் நீத்த மக்களுக்கான விசேட மத பிரார்தனை இன்று மாலை (17) பம்பளபிட்டிய புனித மேரிஸ் தேவாலயத்தில் கொழும்பு மறை மாவட்ட புனித ஆயர் கலாநிதி மல்கம் ரஞ்சித் அவர்களின் தலமையில் இடம் பெற்றது .

இக் கிறிஸ்தவ மத வழிபாட்டில் லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர் போன்றோரும் கலந்து கொண்டனர். மேலும் இந் நிகழ்வுகள் இராணுவ கிறிஸ்தவ சங்கத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி மற்றும் இதன் செயலாளரான பிரிகேடியர் மஞ்சுல கருணாரத்ன போன்றோரின் பங்களிப்போடு இடம் பெற்றது.

மேலும் இவ் வழிபாட்டு நிகழ்வுகள் பாதிரியார் பெனடிக் ஜோசப் மற்றும் பாதிரியார் பெலிசியஸ் பெரேரா அவர்களின் பங்களிப்போடு கொழும்பு மறை மாவட்ட புனித ஆயர் கலாநிதி மல்கம் ரஞ்சித் அவர்களின் தலமையில் இடம் பெற்றதோடு இதன் போது அவர் 1971 1983 1989 போன்ற ஆண்டுகள் உள்ளடங்களாக 30வருட கால போரின் மூலம் எமது தாய் நாடானது குருதியினால் நிரம்பி காணப்பட்டது மீண்டும் இவ்வாறானதோர் அசம்பாவிதம் ஏற்படாது இருத்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அந்த வகையில் நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இராணுவமானது மிகவும் அர்பணிப்புடன் செயற்பட்டது மேலும் கட்டுவாபிடிய புனித யூட் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் போன்றவற்றில் ஏற்பட்ட தாக்குதல்களின் போது மிகவும் அவர்பணிப்புடன் செயற்பட்டனர் என மறை மாவட்ட புனித ஆயர் கலாநிதி மல்கம் ரஞ்சித் அவர்கள் தெரிவித்ததுடன் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் தமது வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துள்ளார்.

இவ் வழிபாட்டு நிகழ்வுகள் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்களின் உரையை அடுத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந் நிகழ்வுகளில் வேதாகம வாசிப்புகள் ஜெபங்கள் மற்றும் நற்கருணை போன்ற வழிபாடுகள் இடம் பெற்றன.

இந் நிகழ்வின் இறுதியில் இறுதியுரையானது லெப்டினன்ட் கேர்ணல் ரெஹான் வெத்தசிங்க அவர்களால் நிகழ்த்தப்பட்டது. latest Running | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf