15th May 2019 15:20:56 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவினரால் கடந்த செவ்வாய்க் கிழமையன்று (14) தேசிய இராணுவ தினமானது (ரணவிரு தினம்) கண்டி மைலபிடிய உயிர் நீத்த படையினரின் நினைவுத் தூபியில் இடம் பெற்றது.
இன்றய தினத்தில் உயிர் நீத்த படையினரின் மனைவி பிள்ளைகள் சொந்தங்கள் மற்றும் குடும்பத்தார் கலந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தியதுடன் படையினரும் இதன் போது கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வானது உயிர் நீத்த மற்றும் காணாமல் போன படையினருக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தலுடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து விளக்கேற்றல் நிகழ்வும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகான ஆளுனரான மதிப்பிற்குறிய மைத்திரி குணரத்தின மத்திய பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் லக்சிறி வடுகே 11ஆவது படைத் தலைமையக பிரிகேடியர் எச் எம் எஸ் ஹேரத் 111ஆவது படைப் பிரிவின் கேர்ணல் டபிய்யூ பி டபிள்யூ எம் அலுவிஹார கடற்படை பொலிஸ் அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உயிர் நீத்த படையினரின் குடும்பத்தார் பொதுமக்கள் போன்றோர் கலந்து கொண்டனர். jordan release date | adidas NMD Human Race