14th May 2019 12:40:53 Hours
வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய சால்ஷ் நிர்மலநாதன் கடந்த திங்கட்கிழமை 13 ஆம் திகதி வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களை சந்தித்ததோடு வன்னிப் படையினரினால் பயங்கரவாத தாக்குதலுக்கெதிராக பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் சட்டம் ஒழுங்குகுளுக்காக தனது பாராட்டினையும் தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தற்போதய கடின சூழ்நிலைகளில் வன்னி மக்களின் பாதுகாப்புக்காக வன்னி பாதுகாப்பு தலைமையகத்தினால் எடுக்கப்பட்ட உச்சகட்ட முயற்சி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அவர்களின் பங்களிப்பினைப்பற்றியும் எடுத்துக் கூறினார்.
அதனைத் தொடந்து, மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துகளுக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய பயங்கரவாத செயற்பாடுகள் அல்லது குண்டுவெடிப்புகளை இல்லாதொழிக்க படையினர் தொடந்தும் தங்களது தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவர் என குறிப்பிட்டார். மேலும் இச்சந்திப்பில் பிரிகேடியர் ஜெனரல் ஸ்டாப் பிரிகேடியர் ஹரென்ர ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டார். Authentic Nike Sneakers | GOLF NIKE SHOES