13th May 2019 16:54:02 Hours
இராணுவ பயிற்றுவிப்பு பணிப்பகத்தின் புதிய பணிப்பக ஜெனரலாக மேஜர் ஜெனரல் டிஎஸ் பன்சஜயா அவர்கள் மத அனுஷ்டானங்களுக்கு அமைவாக தமது கடமைப் பொறுப்பை ஏற்றார். மேலும் இவ் அதிகாரியவர்கள் முன்னர் இக் கடமைப் பொறுப்பை உடைய மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சி அவர்களின் 30 வருட சேவையின் ஓய்வை முன்னிட்டு இப் பதவியானது மேற்படி அதிகாரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது மேஜர் ஜெனரல் டிஎஸ் பன்சஜயா அவர்கள் தமது காரியாலயத்தில் கடமைப் பொறுப்பை அனைத்து மத தலைவர்களுமான பௌத்த கத்தோலிக்க மற்றும் இஸ்லாம் மௌலவிமார்களின் ஆசிகளுடன் ஏற்றார்.
அந்த வகையில் மேஜர் ஜெனரல் டிஎஸ் பன்சஜயா அவர்கள் முன்னர் மின்னேரிய காலாட் படையணி பயிற்றுவிப்பு மையத்தில் சேவையாற்றியுள்ளதுடன் பல பதவிகளையும் வகித்துள்ளார். trace affiliate link | nike air max 95 obsidian university blue book list