13th May 2019 17:28:37 Hours
கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பொலியன்பொகுண கிராம சேவகர் பிரிவிற்குற்பட்ட நாகேந்திர வித்தியாலயம் மற்றும் புண்ணனிரவி பிரதேச தம்பிராசா முன்பள்ளி போன்ற மாணவர்களுக்கான சுகாதார வசதிகள் போன்றன கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் அமெரிக்காவில் உள்ள இலங்கை நிறுவனத்தின் அனுசரனையில் இரு வேறு புதிய சுகாதார வசதிகள் அமைத்து வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களால் வைத்தியர் சுகுமார் நாகேந்திரன் அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இவரால் ருபா 5.5 இலட்சம் பெறுமதியான நன்கொடை இப் பாடசாலை மாணவர்களின் சுகாதார வசதிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டுமானப் பணிகளை 57ஆவது படைத் தலைமையகத்தின் 1ஆவது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 14ஆவது தேசிய பாதுகாப்பு படையணி போன்ற பொறியியலாளர் படையணியின் வழிகாட்டலின் கீழ் மேற்கொண்டுள்ளன.
கடந்த வியாழக் கிழமையன்று (09) மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய அவர்களால் இப் பாடசாலை மாணவர்களுக்காக சுகாதார வசதிகள் திறந்து வைக்கப்பட்டு வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் 57ஆவது படைத் தலைமையக தளபதியான பிரிகேடியர் ஏஎஸ் ஹேவவிதாரண 572ஆவது மற்றும் 573ஆவது படைப் பிரிவுகளின் தளபதிகள் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் போன்றோர் கலந்து கொண்டனர். latest jordan Sneakers | Nike