13th May 2019 18:21:05 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் வவுணியா மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசமான நாவக்குளம் கிராம வாசிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க அவர்களின் தேவை கருதி குழாய் குடிநீர் வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
நாவக்குளம் கிராமானது 100 குடும்பங்களைக் கொண்ட மிகவும் பின்தங்கிய கிராமாக காணப்படுவதுடன் இக் கிராம வாசிகளிடம் குடிநீர் தட்டுப்பாடானது பாரிய அளவில் காணப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக மற்றும் உபகரண அதிகாரியான கேர்ணல் இந்து சமரகோண் அவர்களின் தலைமையில் மற்றும் அவரது சக நண்பர்களான விரிவுரையாளர் திருமதி நந்தனி சமரகோண் அவர்களின் தலைமையிலான குழுவினரால் இதற்கான அனுசரனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் குடிநீர் வழங்குவதற்கான வழிகாட்டலை வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரோ அவர்கள் வழங்கியதுடன் இதன் போது இம் மக்களுக்கான உதவிகள் செய்து வழங்கப்பட்டன.
இந் நிகழ்வானது கடந்த சனிக் கிழமை (11) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக மற்றும் உபகரண அதிகாரியான கேர்ணல் இந்து சமரகோண் அவர்களின் தலைமையில் விரிவுரையாளரான திருமதி நந்தனி சமரகோண் அவர்களின் அனுசரனையோடு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் 211ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் லால் விஜேதுங்க வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Adidas shoes | Womens Shoes Footwear & Shoes Online