13th May 2019 13:05:26 Hours
இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எம்.எம் கித்சிறி அவர்களது தலைமையில் இம் மாதம் (12) ஆம் திகதி தெஹிவல ஜூம்மா பள்ளிவாசலில் மௌவிகளின் பங்களிப்புடனும், கொழும்பு மஸ்ஜீட் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனும் தற்போதைய நாட்டில் இடம்பெற்றிருக்கும் நிலைமையை தனித்து பாதுகாப்பின் உறுதிப்பாடல் தொடர்பான ஒன்றுகூடல் இடம்பெற்றது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது பணிப்புரைக்கமைய இந்த ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
இராணுவ புணர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் எம்.ஏ அஷாட் இசடீன் அவர்கள் இந்த ஒன்றுகூடலில் உரையாற்றும்போது முஸ்லீம் பக்தர்களாக இருந்து கொண்டு இவ்வாறான அப்பாவி ஜெபங்களில் ஈடுபட்டிருந்தவர்களை மிருகத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளமுடிந்ததா என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது "எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய இராணுவத்தில் இருக்கும் சிரேஷ்ட அதிகாரிகளான நாங்கள் 250 க்கும் மேற்பட்ட மனித உயிர்களது இழப்பை கண்டு சோகத்துடனும் வெட்கத்துடனும் நாம் தோற்றுவிட்டோம் என்ற உணர்வு எமக்கு ஏற்பட்டது. முஸ்லீம்களை இழிவுபடுத்தப்படுவதற்கு இதுபோன்ற தாக்குதல் தேவை தானா? இந்த சோகத்தில் மடிந்தவர்களுடன் நீங்கள் பரிவுணர்வு கொண்டு, ஐக்கியப்பட்ட ஒரு தேசமாக நாம் முன்னேற வேண்டுமானால், மக்கள் எங்கள் மீது இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டமைக்க முயலுங்கள். நாங்கள் மத மற்றும் கலாச்சார ரீதியாக வித்தியாசமாக இருந்தாலும், நாங்கள் ஒரு நாட்டிற்கு சொந்தமானவர்கள், "என்று வலியுறுத்தினார். bridgemedia | Women's Nike Air Max 270 trainers - Latest Releases