09th May 2019 14:44:59 Hours
பூசாவிலுள்ள இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் பட்டாலியன் தலைமையகத்தில் விஷேட தேவையுடைய இராணுவத்தினரது நலன்புரி நிமித்தம் குளிரூட்டப்பட்ட உணவக விடுதியொன்று நிர்மானிக்கப்பட்டு இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க அவர்களினால் இம் மாதம் (8) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
இந்த உணவக விடுதிகள் 70 அடி நீளத்தையும், ஒரே நேரத்தில் 100 பேர்களுக்கான தங்குமிட வசதிகளையும், தளபாட வசதிகளையும் கொண்டுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு இந்த பட்டாலியன் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி இங்கு விஷேடதேவையுடைய இராணுவத்தினரது நலன்புரி நிமித்தம் விடுதி ஒன்று நிர்மானிக்கப்படவேண்டும் என்று தீர்மானித்ததன் நிமித்தம் குறுகிய காலத்தினுள் இலேசாயுத காலாட்படையணி மற்றும் தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த உணவக விடுதி நிர்மானிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இலேசாயுத காலாட் படையணியின் பிரதி கட்டளை தளபதி கேர்ணல் டீ.ஏ.கே திசாநாயக, இலேசாயுத பட்டாலியன் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் ஆர்.எம்.எஸ் ராஜகருணா, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Nike shoes | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!