Header

Sri Lanka Army

Defender of the Nation

06th May 2019 13:25:49 Hours

52 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதி நியமிப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக கெமுனு காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் எஸ்.எஸ் வடுகே அவர்கள் நியமிக்கப்பட்டார்.

இவர் சமய சம்பிரதாய முறைப்படி இம் மாதம் (7) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது பதவியை பதவியேற்றார். பின்னர் 12 ஆவது கெமுனு காலாட் படையணியினால் தலைமையக வளாகத்தினுள் புதிய படைத் தளபதிக்கு இராணுவ கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் 521, 522, மற்றும் 523 ஆவது படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படை வீரர்கள் இணைந்திருந்தனர். அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் படைத் தளபதியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இதற்கு முன்பிருந்த படைத் தளபதியான மேஜர் ஜெனரல் லக்‌ஷிரி வடுகே அவர்கள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியாக பதவியுயர்த்தப்பட்டார். Nike sneakers | Releases Nike Shoes