08th May 2019 21:24:24 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘பியவர’ கருத்திட்டத்தின் கீழ் 9 ஆவது தடவையாக முன்பள்ளி புதிதாக நிர்மானித்து திறந்து வைக்கும் நிகழ்வு இம் மாதம் (6) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் வருகை தந்து இந்த முன்பள்ளியை திறந்து வைத்தார்.
ஹேமாஷ் ஹோல்டிங் பிஎல்சி நிறுவனம் மற்றும் அவுட்ரீச் பவுன்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையில் இந்த முன்பள்ளி வன்னி பிரதேசத்திலுள்ள சிறுவர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டன.
ஹேமாஷ் அவுட்ரீச் பவுன்டேஷன் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் திருமதி சிரோமி மாஷகோராலா அவர்களினால் 3.73 மில்லியன் ரூபாய் செலவில் இந்த முன்பள்ளிக்கு கட்டிடம், தளபாடங்கள், பாடசாலை உபகரணங்கள், ஊஞ்சல்கள், விளையாட்டு உபகரணங்களை பெற்று கொள்வதற்கு உதவிகள் வழங்கப்பட்டன.
ஹேமாஸ் அவுட்ரீச் பவுன்டேஷன் நிறுவனம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சின் உதவியுடன் இது வரைக்கும் 52 முன் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.
21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் குமார ஜயபதிரன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 211 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் லால் விஜயதுங்க அவர்களதி கண்காணிப்பின் கீழ் 2 (தொ) பொறியியல் சேவைப் படையணியின் சிரேஷ்ட உயரதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் எச்.பீ.சீ மஹேந்திர அவர்களது தலைமையில் மேஜர் டப்ள்யூ. சி தேசபிரிய அவர்களது மேற்பார்வையில் இந்த கட்டிட பணிகள் நிர்மானிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மேலதிக வன்னி மாவட்ட செயலாளர் திரு ராதா கிருஸ்ணன் ஆனந்தன், 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் குமார ஜயபதிரன, 211 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் லால் விஜயதுங்க அவர்கள் இணைந்து கொண்டனர். short url link | Air Jordan Release Dates 2020