Header

Sri Lanka Army

Defender of the Nation

05th May 2019 18:06:43 Hours

611 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கேர்ணல் K.A.W.N.H பண்டாரநாயக அவர்கள் 611 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய படைத் தளபதியாக சமய சம்பிரதாய முறைப்படி இம் மாதம் (6) ஆம் திகதி வவுனியா ஈச்சங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பதவியேற்றார்.

இதற்கு முன்பு படைத் தளபதியாக இருந்த கேர்ணல் சமன் லியனகே அவர்கள் புத்தளையிலுள்ள தொழில் துறை வளர்ச்சி மையத்தின் பிரதி கட்டளை தளபதி பதவிக்கு இடமாற்றம் செய்ததன் நிமித்தம் 611 ஆவது படைத் தலைமையகத்திற்கு இவர் புதிய படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

புதிய படைத் தளபதிக்கு 23 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பின்னர் படைத் தளபதியினால் படைத் தலைமையக வளாகத்தினுள் மாமரம் நடும் நிகழ்வு இடம்பெற்று பின்பு தேநீர் விருந்தோம்பல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் 23 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 17 (தொண்டர்) சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர். Buy Sneakers | jordan Release Dates