06th May 2019 14:18:02 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சுன்டுக்குளி காட்டுப் பகுதியில் இம் மாதம் (5) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கேரளா கஞ்சா பொதியொன்று கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த பொதியானது 140.8 கிலோ கிராம் நிறையை கொண்டிருந்தது. பின்னர் இந்த கேரள கஞ்சா உள்ளடக்கப்பட்ட பொதியை இராணுவத்தினர் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப் படையினர்களுக்கு கையளித்தனர்.
இந்த தேடுதல் பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது பணிப்புரைக்கமைய 55 ஆவது படைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டன. latest Running | Sneakers