05th May 2019 18:06:41 Hours
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் 5 ஆவது ஆண்டு பூர்தியை முன்னிட்டு (04) ஆம் திகதி சனிக்கிழமை இரவு முழுதும் பிரித் பூஜையும் “சங்கீகா தானமும்”வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றன.
இப் பூஜை நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் (04) ஆம் திகதி காலை கலந்து கொண்டார்.அதன்படி (03) ஆம் திகதி வெள்ளிக்கிழமை இராணுவ வைத்தியசாலையின் கட்டளைத் தளபதியும் இராணுவ சுகாதார சேவை பணியகத்தின் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க அவர்களின் அழைப்பை ஏற்று 26 மகா சங்க தேரரகள் ஆசிர்வாத பூஜைகளுக்காக கலந்து கொண்டார்கள்.அதனைத் தொடர்ந்து (ஹீல் தானம்) காலை உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் ‘அராம தஹம்மத்திலக தேரர், முறுத்தேடுவே ஆனந்த தேரர், வகுமுவே விஜேவன்ஷா தேரர் மற்றும் சிலரால் “அனுஷாசன” ஈஸ்டர் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்மையில் பயங்கரவாத குண்டுக் தாக்குதலகளில் உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் யுத்தத்தின்போது காயமடைந்த இராணுவ வீரர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதங்களை வழங்கினர்.
இந் நிகழ்வில் இராணுவ சுகாதார சேவை பணியகத்தின் பிரிகேடியர் பி.ஏ.சி பெணான்டோ இராணுவ வைத்தியசாலையின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பின் கேர்ணல் நிஷாந்த பதிரன மற்றும் இராணுவ சுகாதார சேவை பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட் அதிகாரிகள் படையினரும் கலந்து கொண்டன. Sports News | Nike Shoes