03rd May 2019 14:38:44 Hours
இலங்கை இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் நிர்மான பணிகளுடன் வவுனியா கலாச்சார மண்டபம் மறுசீரமைக்கப்ட்டு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களினால் வவுனியா மாவட்ட செயலாளருக்கு ஏப்ரல் மாதம் (30) ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிவில் விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான மத்திய நிலையமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் பராமரித்து வந்த இந்த நிலையம் பின்னர் பாழடைந்த நிலையில் காணப்பட்டது.
இராணுவ தளபதியின் ஆசிர்வாதத்துடன் 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி இந்த கலாச்சார மண்டப சீரமைக்கும் பணிகள் 22 இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் மேஜர் டப்ள்யூ.சி தேசபிரிய அவர்களது கண்காணிப்பின் கீழ் 22 ஆவது இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் எச்.பீ.சி மஹேந்திரா அவர்களது தலைமையில் 10 மில்லியன் ரூபாய் செலவில் மீள் நிர்மானிக்கப்பட்டு பின்னர் தமிழ், முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களின் நலன்புரி நிமித்தம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் திரு ஐ.எம். ஹனீபா, வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா, வவுனியா பிரதேச செயலாளர் திரு. கே உதயராசா மற்றும் மத குருத் தலைவர்கள் இணைந்திருந்தனர். Running sport media | UOMO, SCARPE