02nd May 2019 14:59:50 Hours
பயிற்சி இலக்கம் 27 இன் கீழ் பயிற்சிகளை நிறைவு செய்த படையினர் 157 பேரின் பயிற்சி நிறைவு விழா கேகாலையிலுள்ள பெரகல சிங்கப் படையணியின் பயிற்சி பாடசாலை மைதானத்தில் ஏப்ரல் மாதம் (27) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த பயிற்சி நிறைவு விழாவில் இலங்கை பொறியியல் படையணி, இலேசாயுத காலாட் படையணி, இராணுவ பொறியியல் சேவைப் படையணி, மருத்துவ படையணி, இராணுவ பொது சேவைப் படையணி, இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த படை வீரர்கள் இராணுவ பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறினார்கள்.
583 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஜி.டீ சூரியபண்டார அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார்.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது எண்ணக் கருவிற்கமைய அறிமுகப்படுத்திய பயிற்சி பயிலிளவியரினால் விளாமரக் கன்றுகள் நடும் நிகழ்வும் இந்த பயிற்சி பாடசாலை பூமியினுள் இடம்பெற்றது.
இந்த பயிற்சி கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்.கே.வி.டீ ரத்னாயக அவர்களது தலைமையில் கெப்டன் ஈ.டீ.பி எதிரிசிங்க, சாஜன் ஈ.எச.என் சம்பத் அவர்களது பூரண ஒத்துழைப்புடன் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு நான்கு மாத காலம் இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பயிற்சிகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற வீரனாக பொறியியல் சேவை படையணியைச் சேர்ந்த பயிலிளவ படை வீரன் ஜி.ஜி.எம்.பி.டீ குமார, சிறந்த உடல் பயிற்சி வீரனாக பொறியியல் படையணியைச் சேர்ந்த ஏ.எம்.சி.எல் அதிகாரியும், சிறந்த துப்பாக்கி சூட்டாளராக மருத்துவ படையணியைச் சேர்ந்த எல்.எச்.எச்.டீ குமார அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.Sports News | Air Jordan