29th April 2019 22:00:05 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில பொதுமக்களது வருமானத்தை ஊக்குவிக்கும் முகமாக பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை கொள்வனவு செய்து இந்த உற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த உற்பத்தி திட்டங்கள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது வழிக்காட்டலின் கீழ் அந்த படைப் பிரிவில் கடமை வகிக்கும் கேர்ணல் நலின் ஆரியசேன அவர்களது தலைமையில் பிரதேச வாசிகளிடமிருந்து காட்போட் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், பிளாஸ்டிக் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், குடிநீர் போத்தல்கள் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பிளாஸ்டிக் போத்தல்கள் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், டின்கள் ஒரு கிலோ 06 ரூபாய்க்கும், வெள்ளை கண்ணாடி துண்டுகள் ஒரு கிலோ 05 ரூபாய்க்கும், பிரவுன் கண்ணாடி துண்டுகள் ஒரு கிலோ 02 ரூபாய்க்கும், பச்சை கண்ணாடி துண்டுகள்ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கும், ஜோகட் பிளாஸ்டிக் கப்புக்கள் ஒரு கிலோ 02 ரூபாய்க்கும், இராணுவ சேகரிப்பு நிலையங்களில் பெற்றுக் கொள்ளப்படும்.
வெளிச் சந்தைகளில் 65 % விற்பனையாகும் இந்த உற்பத்தி பொருட்கள் இராணுவத்தினரது ஏற்பாட்டில் பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டு பின்னர் இராணுவத்தினரால் உற்பத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் வரும் இலாபம் பாடசாலை மாணவர்களுக்கு உதவும் திட்டங்களுக்காக இராணுவத்தினரால் பயண்படுத்தப்படுகின்றது.
இந்த திட்டங்கள் 65 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள படைத் தலைமையகங்கள், இராணுவ பயிற்சி பாடசாலைகளில் சேகரிக்கப்டுவதாக பொது மக்களுக்கு அறிவிப்பு செய்து சேகரிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்கள் இந்த புதிய திட்டத்தை வெற்றிகரமாக மதிப்பிட்டதன் பின்னர் சுற்றுச் சூழல் நட்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் தனது ஒத்துழைப்பை முழுமையாக வழங்கியிருந்தனர். Running Sneakers Store | Sneakers