Header

Sri Lanka Army

Defender of the Nation

29th April 2019 17:25:51 Hours

பாதுகாப்பு செயலாளராக முன்னாள் ஜெனரல் சாந்த கோட்டேகொட நியமிப்பு

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வு பெற்ற முன்னாள் ஜெனரலான எஸ்.எச் சாந்த கோட்டேகொட அவர்கள் இம் மாதம் (29) ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இவர் 17 ஆவது இராணுவ தளபதியாக 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் திகதி நியமிக்கப்பட்டு தனது 36 வருட இராணுவ சேவை காலங்களை நிறைவு செய்து 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

ஜெனரல் கோட்டேகொட அவர்கள்இராணுவ தலைமையகத்திலும், பதவி நிலை பிரதானி, கூட்டுப்படைத் தளபதியாகவும், கிழக்கு தளபதியாகவும் கடமை வகித்ததன் பின்பு இராணுவ தளபதியாக பதவியுயர்த்தப்பட்டார்.

இவர் இராணுவத்தில் பொறுப்புணர்ச்சியுடனும், அர்ப்பணிப்புடனும் பாரிய சேவைகளை ஆற்றி இராணுவத்திற்கு கௌரவத்தை பெற்றுத்தந்துள்ளார்.

இலங்கை இராணுவத்தில் பதவி நிலை பிரதானியாகவும், தொண்டர் படைத் தளபதி, பொது நிர்வாக பிரதானியாகவும், இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியாகவும், இராணுவ தலைமையக பயிற்சி பணிப்பாளராகவும், இராணுவ புலனாய்வு பணிப்பாளராகவும், 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும், இரத்தினபுரி பிரதி கட்டளை தளபதியாகவும், கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டளை அதிகாரியாகவும், தேசிய புலனாய்வு திணைக்களத்தின் பிரதி கட்டளை அதிகாரியாகவும், பதவிநிலை அதிகாரியாகவும், பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை தலைமையகத்தின் ஒருங்கினைப்பு அதிகாரியாகவும், களுத்தரை மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேர்ணல் பதவி நிலை அதிகாரியாகவும், 4 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியாகவும், 1 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் நிறைவேற்று அதிகாரியாகவும், பதவி நிலை 11 தரத்திலுள்ள பதவிகளில் இராணுவத்தில் கடமை வகித்துள்ளார்.

மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களான வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாகவும், 21, 51 மற்றும் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும், மிருசுவில் படைத் தளபதியாகவும், மட்டக்களப்பு, மன்னார், காங்கேசன்துறை மற்றும் பூநகிரி பிரதேசங்களில் பொறுப்பான தலைமை வகிக்கும் பணிகளையும், கிழக்கு மாகாணங்களில் முப்படையினர், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் 1970 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் இலங்கை இராணுவத்தில் கெடேற் அதிகாரியாக இணைந்து இரண்டாம் தர லெப்டினனாக நியமிக்கப்பட்டு இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் உள்புகுத்தப்பட்டு இந்த படையணியில் நிறைவேற்று அதிகாரியாகவும், (1973) ஆம் ஆண்டு இளம் அதிகாரி பயிற்சிகளையும், (1979) ஆம் ஆண்டு இந்தியாவில் பட்டாலியன் ஒத்துழைப்பு ஆயுத பயிற்சியும், (1980) ஆம் ஆண்டு ஜூனியர் கட்டளை பயிற்சியும், (1983) ஆம் ஆண்டு இந்தியாவில் சி.ஆர்.டப்ள்யூ பயிற்சிகளையும்,(1990 – 1992) ஆண்டு வரை இந்தியாவில் சிரேஷ்ட கட்டளை பயிற்சிகளையும், (1997) ஆம் ஆண்டு அமெரிக்க ஹவாய் நகரில் பசுபிக் பிரதேச விஷேட நடவடிக்கை பயிற்சியும், (2000) ஆம் ஆண்டு இந்தியா அடிப்படை தேசிய பாதுகாப்பு கல்லூரி பயிற்சியும், பிரிட்டனில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்ற விடயங்கள் தொடர்பான சிறப்பு (M15) பயிற்சிகளை பெற்றிருந்தார்.

இவர் சமாதான பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப கட்டத்தின் போது அரசாங்கக் குழுவிற்கு இராணுவ ஆலோசகராக முக்கிய பங்கை வகித்தார். இவர் இராணுவத்தில் ஆற்றிய பாரிய சேவையினை பாராட்டி வீர விக்ரம விபூஷனம் , ரன விக்ரம பதக்கம், ரன சூர பதக்கம், உத்தம சேவை பதக்கம், பூரன பூமி பதக்கம் மற்றும் வடமராச்சி நடவடிக்கை பதக்கங்கள் கிடைக்கப்பட்டது.

இவர் கல்கிஸ்ஸ புனித தோமஸ் கல்லூரியில் தனது கல்வியை மேற்கொண்டுள்ளதுடன் கல்லூரியில் கிரிக்கட் மற்றும் விளையாட்டு துறைகளில் சிறந்த மாணவனாக திகழ்ந்துள்ளார். இவர் திருமதி சோனியா கோட்டேகொடவை திருமணம் செய்து ஒரு ஆண் மகனும் ஒரு பெண் பிள்ளையும் இவருக்கு உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்ள. (புகைப் படங்கள்: ஜனாதிபதி ஊடக பிரிவிலிருந்து) latest Nike release | nike fashion