Header

Sri Lanka Army

Defender of the Nation

29th April 2019 20:31:01 Hours

முப்படையினர் மற்றும் பொலிஸார் பயங்கரவாத ஒழிப்பு பணிகளில் ஈடுபாடு

பயங்கரவாத சந்தேக நபர்கள், இணையத்தளங்கள் வேறு எந்த வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான இயக்கங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்க முடியும்.இப்போது நாடு முழுவதும் தேடுதல்நடவடிக்கைகள் இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமையமேற்கொள்ளப்படுகின்றது. இதன் ஒரு கட்டமாக சாய்தமருதில் இடம்பெற்ற நடவடிக்கை தொடர்பாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் விளக்கமளித்தார். கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் பேச்சாளர்கள் கீழ் காணும் விடயங்களை உள்ளடக்கி விளக்கமளித்தனர்.

நாடு முழுவதும் உள்ள 7 பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளபடுகின்றது. அத்துடன் இந்த தேடுதலின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் கைப்பற்றப்பற்ற ,வெடி மருந்துகள் , வன்முறையை விளைவிக்கும் ஆயுதங்கள் இராணுவத்தினரால் அருகாமையில் இருக்கும் பொலிஸாருக்கு கையளிக்கப்படும்.

மேலும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் விளக்கமளிக்கையில் நாட்டில் தற்போது நிலவும் பயங்கர நிலைமையைஒழிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு பொது மக்களது ஒத்துழைப்பு தேவையென்றும், சமூக வலையங்களில் வெளியான பொய்யான வதந்திகளை நம்பவேண்டாம் என்றும், பாதுகாப்பு தரப்பினால் உறுதி செய்து வெளியாகும் தகவல்களை நம்புமாறும், எல்டிடிஈ பயங்கரவாதத்தை ஒழித்த பாதுகாப்பு படையினர்கள் தற்பொழுது இஸ்லாம் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக வலியுறுத்தினார்.

பொலிஸ் ஊடக பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அவர்கள் விளக்கமளிக்கையில் நாட்டில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய 59 சந்தேக நபர்கள் தற்பொழுது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பெண்கள் உட்பட 15 பேர் குற்றவியல் புலனாய்வு பிரிவிலும் , பயங்கரவாத தடுப்பு பிரிவில் 7 பேரும் மாவனையில் பெண் ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முஸ்லிம் சமுதாயத்தின் சமாதான விரும்பிகள் இந்த தீவிரவாத நபர்கள் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்பினர்களுக்கு வழங்கினார்களென்றும், இது சவலக்கடை மரதமடு பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களை எடுத்து காட்டுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடற்படை பேச்சாளரான லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார இது தொடர்பாக தெரிவிக்கையில் பயங்கரவாதம் தொடர்பான இஸ்லாமிய தீவிரவாதத்தையும், சந்தேகநபர்களை நோக்கி நடாத்திய 24 மணி நேர சுற்றுவளைப்பு நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் 11 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

விமானப்படை பேச்சாளரான குரூப் கெப்டன் ஹிகான் செனவிரத்ன அவர்கள் இது தொடர்பாக தெரிவிக்கையில் 24 மணித்தியாலயம் நடாத்தப்பட்ட சுற்றுவளைப்பு நடவடிக்கைகளின் போது 28 வீடுகள் ஏகல, ரத்தொலுகம, வெலிமட, தியதலாவை மற்றும் ராகம பகுதிகளில் விமானப் படையினரால் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் போது 5 சந்தேக நபர்கள் வீடியோ புகைப்படங்கள், (சொட்கன்) துப்பாக்கிகள், கைப்பற்றப்பட்டன. .

இதேபோல், விமானப்படையினர்கள் இன்று காலை (29) ஆம் திகதி கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தினுள் பாரிய தேடுதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். அத்துடன் கொழும்பு மற்றும் மத்தளசர்வதேச விமான நிலையங்களின் பாதுகாப்புக்களும் விமானப் படையினரால் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று விமானப்படை பேச்சாளர் வலியுறுத்தினார். bridgemedia | Nike Releases, Launch Links & Raffles