Header

Sri Lanka Army

Defender of the Nation

27th April 2019 00:02:29 Hours

புதுபிப்பு : துப்பாக்கி சூடு எதிர்த் தாக்குதலில் இரண்டு துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டனர்

நிந்தவூர் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்னர் பொலிஸ் அதிகாரிகள் உட்பட இராணுவ படையினரால் (26)ஆம் திகதி வெள்ளிக்கிழமை திடீர் சுற்றிவலைப்பு தேடுதலின் பிரகாரம் பல தேடுதல் நடவடிக்கைகள் இடம் பெற்றுவறுவதுடன் நடு இரவு நேரத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்பின்னர்,புலனாய்வு பிரிவினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய இராணுவத்தினரால் இந்த இலக்கு உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வீடுகள் சோதனை இடும் சந்தர்ப்பத்தில் தற்கொளைவாதிகளால் மூன்று குண்டுகளுடன் இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து இராணுவத்தினரால் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியதுடன் வீடுசோதனை இடப் பட்டது.அதன் பின்னர் அந்த வீட்டில் இருந்து பெறும் தொகையான வெடிபொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் சிவில் ஒருவர் கொள்ளப்பட்டதுடன் 3 - 4 பேர் காயமடைந்தனர். அத்துடன் அந்த வீட்டில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேபோல் மேலும், ஒரு தற்கொலை குண்டுதாரி ஒழிந்திருந்ததுடன், இந்த தீவிரவாதி இறந்துவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.

ஆனாலும் இந்த இருட்டில் இராணுவத்தினர் மீது தீவிரவாதிகளால் வெடிவைக்க முடியாமல் போனது. அதன் பின்னர் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனர் அருண ஜயசேகர அவர்களின் பரிந்துரைக்கமைய படையினரால் சிவில் மக்களின் வீடுகளில் பாதுகப்பு நடவடிக்கைகள் மேற் கொண்டன.

அதனைத் தொடர்ந்து சோதனை நடந்தியபோது பதிவில்லாத புதிய வேன் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டன. மற்றும் தவூகித் ஜமாத் அமைப்பின் நிறுவனத்தின் மச்சான் ஆகிய நியாஸ் அவர்களுடையது என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த வேனில் இருந்த இரண்டு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆரம்ப அறிக்கைகள் காணப்பட்டதுடன் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி அக்கரைப்பற்று பிரதேசத்தில் வாங்கப்பட்டது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று தற்போது முப் படையினுரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை நடத்தி வருகின்ன.

அதன்படி இலங்கை இராணுவ ஊடக பேச்சாளர் அவர்களின் கருத்துப்படி, கொழும்பிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் கடந்த (26) ஆம் திகதி வெள்ளிக்கிழமை சம்மந்துரை பிரதேசத்தில் வீடுகள் பரிசோதனையின் போது வெடிபொருட்கள், டெடனேட்டர் , கத்தி ,ஜெலக்னைட் குச்சிகள், அமிலம் (எசிட்) போத்தல், வயர்,ISIS கொடிகள், தற்கொலை ஜாக்கெட்டுகள் மற்றும் இராணுவ சீருடைகள் போன்றன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்த துப்பாக்கிதாரிகள் அடையாளம் காணப்படவில்லை என்றும் இந்த நிலைமை தொடர்பாக தற்காலிகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. bridgemedia | Nike for Men