Header

Sri Lanka Army

Defender of the Nation

26th April 2019 13:24:16 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே பதவியேற்பு

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் கடந்த வியாழக்கிழமையன்று (25) இ.இ.தொண். படையணிதலைமையகத்தில்வைத்து தனது பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார்.மேலும் இவர் மேற்கு பாதுகாப்பு படையின் தற்போதய தளபதி என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தலைமையக நுழைவாயிலில் மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் இராணுவ மரியாதையுடன் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றுதலினைத் தொடர்ந்து பௌத்த மத தேரர்களால் ஆசர்வாத பூஜை அனுஷ்டானங்களுடன் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார். அத்துடன் மகாசங்க தேரர்களின பிரித் பூஜையின் பின்னர் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது பதவி பெறுப்பேற்றுக்கொண்டார்.

மேலும்'ஹீல் தானம் (காலை உணவு) பௌத்த மத தேர்களுக்கு வழங்கப்பட்டது.

அதன்பின்னர் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே அவர்களால் அனைத்து படையினர்களுடன் உரையாற்றுவதற்கு முன் இப் படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி கட்டளை அதிகாரி மற்றும் மேஜர் ஜெனரல் எல்எப் கஸ்தூரியாராச்சி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர்களும் கலந்து கொண்டனர். latest Running | Nike