23rd April 2019 11:36:48 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கமைய இராணுவ தடுப்பு மருந்து மற்றும் மன ஆரோக்கிய பணியகத்தின் ஏற்பாட்டில் இம் மாதம் (23) ஆம் திகதி ஒரு நாள் முழுமையான செயலமர்வு யாழ் பாதுகாகப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வின் போது 'மன அழுத்தம் மேலாண்மை, மருந்து தடுப்பு, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, தற்கொலை தடுப்பு மற்றும் வாழ்க்கை திறன் அபிவிருத்தி' விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இலங்கை இராணுவ அதிகாரிகள் உட்பட படையினர்கள் 300 பேர் இந்த செயலமர்வில் இணைந்து கொண்டனர். Sports Shoes | UOMO, SCARPE