Header

Sri Lanka Army

Defender of the Nation

25th April 2019 16:08:45 Hours

மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களுக்கு தலைமையகத்தில் கௌரவ மரியாதைகள்

பிரதி பதவி நிலை பிரதானி மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் இராணுவ சேவையிலிருந்து 36 வருடங்களை பூர்த்தி செய்து ஓய்வு பெற்று செல்வதன் நிமித்தம் இவருக்கு போயகனையிலுள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் இம்மாதம் (21) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி கௌரவ மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

அன்றைய தினம் படைத் தலைமையகத்திலுள்ள நினைவு தூபி வளாகத்தினுள் பரம வீர விபூஷன பதக்கங்களை பெற்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூறி இரண்டு நிமிட மௌன அஞ்சலிகள் செலுத்தி படைத் தளபதியினால் கௌரவ அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஓய்வு பெற்று செல்லும் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவனையினால் படையினர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்தி புதிய விஜயபாகு காலாட் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்தன குணவர்தன அவர்களுக்கு தனது பதவியை பாரமளித்தார்.

அத்துடன் அன்றைய தினம் விஜயபாகு காலாட் படையணியின் சேவா வனிதா பிரிவின் தற்போதைய தலைவியானதிருமதி சிரோமி குணவர்தன அவர்களது தலைமையில் முன்னாள் சேவாவனிதா பிரிவின் தலைவி திருமதி அனுஜா காரியகரவனைக்கு பிரியாவிடை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

மேலும் அன்றைய தினம் மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களுக்கு படைத் தலைமையகத்தில் வைத்து இவரது பாரிய சேவைகளை பாராட்டி நினைவு சின்னமும் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. spy offers | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp