Header

Sri Lanka Army

Defender of the Nation

25th April 2019 21:24:02 Hours

முப்படை மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான விளக்கத்தை தெரிவிப்பு

பாதுகாப்பு அமைச்சில் நாட்டில் தற்போது இடம்பெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் இராணுவம், கடற்படை, விமானனப்படை மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர்கள் பொது மக்களுக்கு வதந்திகள் மற்றும் தவறான செய்திகள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

பொலிஸ் ஊடக பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அவர்கள் உரையாற்றும் போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களின் தலைமையில் குற்றவியல் திணைக்களத்தின் 15 குழுவினர்கள் புலனாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் இன்றைய தினமான (25) ஆம் திகதி வரையில்நாட்டில் அனைத்து பிரதேங்களிலும் இருந்து 70 சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்து விசாரனைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கமான நபர்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் கீழ்கானும் தொலைபேசி இலக்கங்களான 118 மற்றும் 011-2322485 க்கு தெரிவிக்கவும்.

இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அதபத்து அவர்கள் உரையாற்றும்போது அவசரகால ஒழுங்கு சட்ட விதிகள் அமுலுக்கு வந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிமித்தம் அந்த பயங்கரவாதத்தை முடக்குவதற்காக நாடு முழுவதும் 10,000 இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் நிறுத்தப்பட்டுள்ளதுடன் நாட்டில் தற்போது வெளிவரும் பொய்யான வதந்திகள் தொடர்பாக விழிப்புணரவுடன் பொது மக்கள் இருக்க வேண்டும். அத்துடன் சந்தேக நபர்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் கீழ் காணப்படும் தொலைபேசி இலக்கங்கங்களான 011-2434251, 011-4055105, 011-4055106, 0766911640 குண்டு செயலிழப்பு பிரிவு 011-2433335 தெரிவிக்கவும்.

கடற்படை பேச்சாளரான லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார உரையாற்றும் போது கடற்படையினரால் 11 சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் மீன்பிடி தொழில் ஈடுபடும் மீனவர்கள் தங்களது தேசிய அடையாள அட்டை மற்றும் படகுகளுக்கான ஆவன உத்தரவு பத்திரங்களுடன் செல்லவேண்டும் என்றும் அத்துடன் நீதிவிரோதமான முறைகளில் வெடிமருந்து பொருட்களை பயண்படுத்தி மீன்பிடி துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வலியுறுத்தினார்.

விமானப்படை பேச்சாளரான குரூப் கெப்டன் ஹுகான் செனவிரத்ன உரையாற்றும் போது பாதுகாப்பு நடவடிக்கை பணிகளில் விமானப்படையினனர் 1000 பேர் அனைத்து பிரதேசங்களிலும் ஈடுபட்டுள்ளதுடன் சர்வதேச விமான நிலையங்களான கொழும்பு, மாத்தளை, இரத்மலானை மற்றும் களுத்தறை போன்ற பிரதேசங்களில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார். Nike shoes | Mens Flynit Trainers