Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd April 2019 16:33:28 Hours

இராணுவ பொலிஸ் படையணியின் 29 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்பு நாராஹென்பிடையில் உள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தின் 29 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதிதாக நிர்மானிக்கப்பட்ட பேக்கரி நிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இப்படையணியின் பிரதி கட்டளைத் தளபதியான கேர்ணல் இளங்ககோன் அவர்களது அழைப்பையேற்று இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.கே.ஜி.டி சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக வருகை தந்து இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இம்மாதம் (19) ஆம் திகதி படையணியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. அத்துடன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீர ர்களை கௌரவித்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் ,அனைத்து பதவியிலுள்ள இராணுவத்தினரது பங்களிப்புடன் தேநீர் விருந்தோம்பல் நிகழ்வும் இடம்பெற்றன.

மேலும் பௌத்தமத போதி பூஜை நிகழ்வுகளும் படைத் தலைமையகத்தில் இடப்பெற்றது. latest Running Sneakers | Jordan Ανδρικά • Summer SALE έως -50%