Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd April 2019 17:20:25 Hours

இராணுவத்தினர் நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகளில்

ஈடுபாடுகடந்த உதிர்த்த ஞாயிறு தினமான (21) ஆம் திகதி குண்டு வெடிப்பில் காலஞ் சென்ற நபர்களது பூதவுடல் அடக்கம் செய்தல் நீர்கொழும்பு கடுவாபிடிய பிரதேசத்தில் இடம்பெற்றது. அதன் போது மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் (23) ஆம் திகதி முழுமையாக இப்பிரதேசத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது தலைமையில் ஆயிரக்கணக்கான மக்களது கண்ணீர் அஞ்சலியுடன் இராணுவத்தினரது முழுமையான பாதுகாப்புடன் கடுவாபிடிய மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

நூற்றுக்கு அதிகமான இராணுவ படையினர் கொழும்பு ஆயர் இல்லம் குருணாகல், இரத்தினபுரி போன்ற பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் ,அரச நிறுவனங்கள், வைத்தியசாலைகள், போக்குவரத்து மத்திய நிலையங்கள் மற்றும் முக்கிய நிலையங்களில் பாதுகாப்பு பணிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு படைத் தலைமையங்களான யாழ்ப்பாணம், வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகளின் நிமித்தம் 386 இராணுவத்தினர் வைத்தியசாலைகள், அரச நிலையங்கள் மற்றும் பொது நிலையங்களில் கடமைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி (22) ஆம் திகதி கொச்சிக்கடை பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்து அந்த தேவாலயத்தின் அருட் தந்தையாரை சந்தித்து இப்பிரதேசத்திற்கான பாதுகாப்பு தொடர்பான விடயங்களை பேசினார். அத்துடன் கொழும்பிலுள்ள ஹோட்டல் அதிகாரிகளை சந்தித்து பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உரையாடினார்.Sport media | Air Jordan