18th April 2019 15:18:22 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 231ஆவது படைப் பிரிவினி; 11ஆவது சிங்க படையணியினர் மற்றும் 4ஆவது கெமுனு ஹேவா படையணியினரின் பங்களிப்புடன் ரட வெனுவென் எகட சிடிமு எனும் கருப் பொருளிற்கமைய மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சிரமதானப் பணிகளும் மற்றும் நெடுங்குளம் மற்றும் வெட்டிகுளம் போன்ற பிரதேசங்களில் காணப்படும் குளக் கட்டுகளில் விவசாயிகளின் தேவை கருதி சுத்திகரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இவ் ஐநாள் சுத்திகரிப்பு பணிகளானது கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன் மூலம் சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் காணப்படும் 25குடும்பங்கள் கடந்த வெள்ளிக் கிழமை (12) மேற்கொள்ளப்பட்ட இச் சுத்திகரிப்பு பணிகளின் மூலம் பயனடைந்துள்ளன.
அத்துடன் இச் சுத்திகரிப்பு பணிகள் 23ஆவது படைத் தளபதியான மேஜர் ஜெனரல் கபில உடலுபொல அவர்களின் கண்காணிப்பில் 231ஆவது படைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வெபர் மைதான சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டவர்களுக்காக 5500 உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. மேலும் இப் பணிகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்போடு நிறைவுற்றது. jordan release date | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf