Header

Sri Lanka Army

Defender of the Nation

13th April 2019 22:44:01 Hours

இராணுவ படையினரால் தீயணைப்பு

மாலபே வீதி அதுகிரிய 10 ஆம் கட்டையின் அருகிலுள்ள ஆடம்பர கடையில் 13 ஆம் திகதி மாலை ஏற்பட்ட திடிர் தீ விபத்தை மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 14 ஆவது படைப்பிரிவு மற்றும் தீயணைக்கும் படையினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

14 ஆவது படைப்பிரிவின் படைத் தளபதியின் வழிகாட்டுதலுடனும் 9 இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டயஸ் குணரத்ன அவர்களின்; மேற்பார்வையுடனும் 3 அதிகாரிகள் 20 படைவீரர்கள் மற்றும் 3 இராணுவ ஓட்டுனர்களுடன் இராணுவ படை தீயணைக்கும் வாகனம் ஆகியன தீயணைக்கும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டன.

மேலும் மேற்கு மாகாணங்களில் தற்பொழுது நிலவுகின்ற கடுமையான உஷ்ண காலநிலையே இத் தீ விபத்திற்கு காரணமென சந்தேகிக்கப்படுகின்றது.best shoes | Women's Designer Sneakers - Luxury Shopping