11th April 2019 18:15:27 Hours
அனுராதபுர சாலியபுர பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கஜபா படைத் தலைமையகத்தின் படையினரால் ஏரிக்கு முன்னால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘கிங் கேட்டரின்’ என்ற அதி நவின விடுமுறை வீடுதி கஜபா படைத் தலைமையகத்தின் தளபதியும் பிரதி பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் சமய மற்றும் சம்பிரதாய நிகழ்வுடன் (11) ஆம் திகதி வியாழக் கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இக் கட்டிடம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரி கரையின் முன்னால் முன்று அடுக்கு மாடி குடியிருப்பாக அமைக்கப்பட்டதுடன் கஜபா படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினரின் நலனுக்காக கட்டப்பட்டுள்ளது.
இக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்விற்கு பிரதான அதிதியாக வருகை தந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கஜபா படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஹரேந்திர பீரிஸ் அவர்களால் வரவேற்கப்பட்டார். ஆதனைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தை ரிபன் வெட்டி திறந்து வைத்ததுடன் பாரம்பரிய பால் பானை பொங்கும் நிகழ்வுகளுடன்பௌத்த மத பிக்குகளின் செத் பிரித் பூஜைகளும் இடம் பெற்றன.
இக் கட்டிடமானது இராணுவ படையினரின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக கஜபா படைத் தலைமையகத்தின் தளபதியும் பிரதி பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினர்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டது.
கஜபா படையணியின் சேவா வனிதா பிரிவு மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் துணை தலைவியான திருமதி சுஜிவ நெல்ஷன் அவர்களும் கலந்து கொண்டார்.
கஜபா படையணியின் சபை உறுப்பினர்கள், கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை தளபதிகள், துணை கட்டளை அதிகாரிகள், படையினர் மற்றும் பலரும் கலந்து கொண்டன.
அத்துடன் இந்த நிகழ்வை நினைவு படுத்தும் நிமித்தம் அனைத்து படையினரும் குழு புகை படத்திலும் இணைந்து கொண்டன. short url link | Hats to Match Jordans Hyper Royal Bulls Hat