Header

Sri Lanka Army

Defender of the Nation

08th April 2019 14:28:09 Hours

யாழ் பிரதேச வாழ் 385குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் சுப்ரீம் மாஸ்டர் சைங் ஹாய் சர்வதேச சங்கத்தின் ஒருங்கிணைப்பில் மற்றுமோர் மனிதாபிமான திட்டமானது முன்னெடுக்கப்பட்டதுடன் இத் திட்டத்தின் மூலம் யாழ் பிரதேசத்தின் 385 வறிய குடும்பங்களிற்கு உலர் உணவுப் பொதிகள் போன்றன 'மனிதனின் கடமையானது சக மனிதர்களுக்கு உதவிக் கரம் நீட்டல்' எனும் கருத்திற்கமைய வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வானது திருமதி ஷாமினி கொடுவேகெதர அவர்களின் ஒருங்கிணைப்பில் 55ஆவது படைத் தலைமையக தளபதியனா பிரிகேடியர் சம்பத் கொடுவேகெதர அவர்களின் தலைமையில் 551 552 மற்றும் 553போன்ற படைப் பிரிவுகளின் கட்டளை அதிகாரிகளின ஒத்துழைப்போடு யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கடந்த சனிக் கிழமை (06) நெல்லியடி மகா வித்தியாலயம் மற்றும் இத்தாவில் மகா வித்தியாலயம் போன்ற பிரதேசங்களில் இத் தளபதியவர்களின் தலைமையில் இப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சுப்ரீம் மாஸ்டர் சைங் ஹாய் சர்வதேச சங்கத்தின் திரு லோரண்ஸ் பெணான்டோ மற்றும் திரு விதுரி பெணான்டோ திரு கிருஷாந்தி பெணான்டோ திரு சஞ்ஜீவ குணரத்ன மற்றும் திரு மெர்லி பெணான்டோ போன்றோரின் ஒருங்கிணைப்பில் சுமார் 7000 ருபா பெறுமதியான மின்;சாரவியல் சோறு சமைப்பான் மற்றும் பைகள் போன்றன வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் கிராம சேவகர்கள் கிழக்கு மாகான பத்திரிகையாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர். Nike air jordan Sneakers | nike air force 1 shadow , eBay