Header

Sri Lanka Army

Defender of the Nation

08th April 2019 14:30:53 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையினரின் நன்கொடை சேகரிக்கும் முகமாக நெலும் பொகுணயில் இடம்பெற்ற நிகழ்வுகள்

இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தலைமையத்தால் நன்கொடை சேகரிக்கும் முகமாக பிரபல்யமான இசைக் கலைஞர்களான கில்போட் ரிச்சர்ட் மற்றும் பல குழுவினரின் பங்களிப்போடு மாலை நேர இசை நிகழ்ச்சிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (07) நெலும் பொகுணவில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டதோடு இராணுவ சேவா வணிதா பிரிவின் தலைவியான திருமதி சந்திரிக்க சேனாநாயக்க அவர்களும் இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டனர். இதற்கான ஒழுங்குகளை இலங்கை இராணுவ தொண்டர் படையணித் தலைமையக பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் எல் எப் கஸ்துரியாராச்சி அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

இந் நிகழ்வில்; இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான N;மஜர் ஜெனரல் குமுது பெரேரா மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Nike Sneakers | Nike nike dunk high supreme polka dot background , Gov