04th April 2019 06:12:43 Hours
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள 12ஆவது படைத் தலைமையகத்தின் 08ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பௌத்தமத இரவு நேர பிரித் வழிபாட்டு நிகழ்வுகள் கடந்த செவ்வாயக் கிழமை (02) இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் 12ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்கள் கடந்த செவ்வாயக் கிழமை (02) இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டதுடன் இவரின் வருகையில் போது இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் இடம் பெற்றது.
அத்துடன் இப் படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள புதிய கட்டடத்தை இவ் அதிகாரியவர்கள் திறந்து வைத்ததுடன் இப் படையணி வளாகத்தில் மரக் கன்றையும் நட்டினார். அதனைத் தொடர்ந்து அனைத்து படையினருடனான மதிய உணவு மற்றும் மாலை நேர இன்னிசை இசை நிகழ்சிகள் போன்றன இடம் பெற்றன.
அந்த வகையில் தங்குமிடத்திற்காக கட்டப்பட்ட கட்டடமானது 12ஆவது படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினரின் பாரியதோர் தேவையை நிறைவு செய்யும் ஒன்றாக காணப்படுகின்றது. Asics shoes | Nike News