03rd April 2019 23:28:18 Hours
பனாகொடையில் அமைந்துள்ள பீரங்கிப் படைத் தலைமையகத்தில் புதிய கிரிக்கெற் மைதானமானது அமைக்கப்பட்டு இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெற் விளையாட்டு மைதானமானது தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான கிரிக்கெற் போட்டிகள் மற்றும் கிரிக்கெற் கழகங்களுக்கிடையிலான போட்டி நிகழ்வுகளை மேற்கொள்ளும் வகையில் இவ் விளையாட்டு மைதானம் காணப்படுகின்றது.
இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட கிரிக்கெற் மைதானத்தில் இராணுவத்தினரின் கோரைக்கைக்கு அமைய தேசிய கிரிக்கெற் விளையாட்டு வீரர்கள் மற்றும் இலங்கை பீரங்கிப் படையணிகளுக்கிடையிலான வு20 கிரிக்கெற் போட்டிகள் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் வி ஆர் சில்வா (ஓய்வு) திரு. பந்துள வர்ணபுர ( இலங்கையின் முதல் டெஸ் கிரிக்கெற் தலைவர்) மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாராச்சி நிறைவேற்ற ஜெனரல் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய விளையாட்டு பணிப்பக பணிப்பாளரான மேஜர் ஜெனரல் அருண சுதசிங்க உயர் அதிகாரிகள் மற்றும் பாரிய அளவிலான பார்வையாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் சர்வதேச விளையாட்டு வீரர்களாக கித்ருவன் விதானகே சமன் ஜயந்த பார்விஸ் மஹருப் நுவன் குலசேகர முதுமுதலிகே புஷ்பகுமார சஜீவ வேரகோன் திலின துஷார சாமர கபுகெதர சசித்திரா சேனாநாயக்க கவுஷால் சில்வா மற்றும் மலிந்த வர்ணபுர போன்றோர் கலந்து கொண்டனர். Asics footwear | Sneakers Nike Shoes